Friday, August 15, 2025
HTML tutorial

தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டள்ளனர்.

சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார் தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை எஸ்.பி. அருண் கபிலன் சென்னை தலைமையக துணை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குடிமை பொருள் வழங்கல் துறை மதுரை மண்டல எஸ்.பி. செல்வகுமார், நாகை எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புர சரக டிஐஜி திஷா மிட்டல் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பிரபாகர் சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குளச்சல் ஏஎஸ்பி சாமுவேல் பிரவீன் கவுதம் திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார் பதவி உயர்வு பெற்று நெல்லை மேற்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News