கடந்த 2023-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்து ஏராளமானோரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பு பிடித்துச் சென்றது. இதில், 20 போ் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, தங்களிடம் உள்ள பிணைக் கைதிகள் பட்டினியால் மிகவும் மெலிந்துள்ள காணொலிகளை ஹமாஸ் படை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காஸாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்து, பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படையிடம் இஸ்ரேல் அரசு ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, இஸ்ரேலில் நேற்று நாடுதழுவிய போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதில் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.