Monday, January 19, 2026

எம்புரான் படத்தில் இடம்பெற்ற 17 சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவான ‘எல் 2 எம்புரான்’ கடந்த 27ம் தேதி வெளியானது.

இப்படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம், ரூ.100 கோடி வசூலை அதிவேகமாக எட்டிய மலையாள திரைப்படமாகும்.

இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், சமூக பிரிவினையைத் தூண்டுவதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து படத்தில் இடம்பெற்ற 17 சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி, படத்தின் நீளத்தை 2 நிமிடங்கள் குறைத்துள்ளனர். மேலும், வில்லன் கதாபாத்திரத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

Related News

Latest News