லெமன் ஜூஸ் வாங்கியதற்கு 17 ரூபாய் “கேஸ் சார்ஜ்” : அதிர்ந்து போன வாடிக்கையாளர்

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வாடிக்கையாளர் லெமன் ஜூஸ் வாங்கியபோது, அவருக்கு வழங்கப்பட்ட பில்லில் “கேஸ் சார்ஜ்” என்ற பெயரில் கூடுதலாக ரூ.17 வசூலிக்கப்பட்டிருந்தது. குளிர்பானத்திற்கு இப்படியான கட்டணம் விதிக்கப்பட்டதை பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். இந்த பில்லின் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாக பரவியது.

இந்த விவகாரம் குறித்து பல நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் இதை கிண்டலாக எடுத்துக்கொண்டு “குடிச்சது ஜூஸு, அதுக்கு எதுக்கு கேஸு?” என்று சமூக வலைத்தளங்களில் கலாய்த்தும் வருகின்றனர்.

Related News

Latest News