மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளிவரும் உபரி நீரால், 150 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள விழுதமங்கலம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வயல்வெளிகளை சூழ்ந்ததால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.