பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த 786 பேர் இந்தியாவில் இருந்த வெளியேற்றப்பட்ட நிலையில் 1,465 இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேர் தூதரக அதிகாரிகள் ஆவார்கள்.