Monday, April 28, 2025

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்!” பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்! சூழும் போர் மேகங்கள்!

“எங்கள் ரத்தம் கொதிக்கிறது என்று” பஹல்காம் தாக்குதலை பற்றி இந்திய பிரதமர் உணர்ச்சிகரமாக பேசி முடிப்பதற்குள் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறியிருக்கும் அடாவடித்தனமான கருத்து நிலைமையை இன்னமும் மோசமாக்கியிருப்பதோடு ஒவ்வொரு இந்தியரையும் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

26 இந்தியர்கள் அநியாயமாக சுட்டுத்தள்ளப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அடுத்தடுத்து தீவிர நடவடிக்கைகளை அறிவித்ததை அடுத்து, பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசி, இந்தியாவை அணு ஆயுதம் மூலம் தாக்குவோம் என்று பகிரங்கமாக மிரட்டியிருப்பது இந்தியா பாகிஸ்தான் அமைதியை குழி தோண்டி புதைப்பதாகவே இருக்கிறது.

ராவல்பிண்டியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹனிஃப் அப்பாசி, “எங்கள் ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவை நோக்கியே இருக்கின்றன. இந்தியா ஏதேனும் துணிச்சலான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தால், அதற்கு தக்க பதிலடி வேண்டியிருக்கும். உலகின் மிக சக்திவாய்ந்த அணுகுண்டு எங்களிடம் உள்ளது. கோரி, ஷாஹீன், கஸ்னவி போன்ற ஏவுகணைகளையும் 130 அணுகுண்டுகளையும் இந்தியாவுக்காக மட்டுமே நாங்கள் வைத்திருக்கிறோம்.

ராஜதந்திர முயற்சிகளுடன், எங்கள் எல்லைகளைப் பாதுகாக்க முழு முன்னேற்பாடுகளையும் நாங்கள் செய்துள்ளோம். நம்மிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், நம்மிடம் உள்ள ஏவுகணைகள், அவை காட்சிக்கு இல்லை. நாடு முழுவதும் நம் அணு ஆயுதங்களை எங்கு வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன், இந்த ballistic ஏவுகணைகள் அனைத்தும் உங்களை குறிவைக்கின்றன” என்று அவர் வெளிப்படையாக எச்சரித்திருப்பது அமைதிக்கான பாதையை அடைப்பதாகவே இருக்கிறது.

Latest news