ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஷாலினி அங்குள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது முனியராஜ் எனும் இளைஞர், கடந்த 6 மாதங்களாக அவரை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், மாணவி ஷாலினி காதலை ஏற்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் கொண்ட முனியராஜ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கினார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, முனியராஜ் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தலைமறைவாக இருந்த முனியராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒருதலை காதலால் இளைஞர், மாணவியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
