Monday, December 22, 2025

த.வெ.க. நிறைவேற்றப்பட்ட பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை மாமல்லபுரத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிகொள்வது எனவும் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் மொத்த அதிகாரத்தை அவருக்கு வழங்குவது எனவும் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் வாசித்த தீர்மானம், விஜய் தலைமையில் நடத்தப்படும் மக்கள் சந்திப்புப் பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கடந்த 3-வது கட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கரூர் 41 பலி விபத்தை நினைவுகூர்ந்தது.

இரண்டாவது தீர்மானத்தை திருப்பூர் மாநகர மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி பாலமுருகன் வாசித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி, கோவை கல்லூரி மாணவி குறித்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தமிழக அரசு விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. மேலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவித்தனர்.

இதோடு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 மீனர்கள் இலங்கை கடற்படையால் கைது, வாக்காளர் பட்டியல் திருத்தம், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் நெல் மற்றும் தானியங்கள் வீணாகும் நிலை, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாக்கப்பட்ட ராம்சர் நிலங்களில் கட்டுமான அனுமதி ரத்து, மக்கள் நிகழ்ச்சிகளில் விஜய்யின் பாதுகாப்பு, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியீடு போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னணி வேட்பாளராக இருப்பதும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்படது கூட்டத்தின் முக்கிய முடிவாக இருந்தது.

Related News

Latest News