தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக்கிற்கு இயற்கை வளங்கள் துறை பொறுப்புகள் கூடுதல் வழங்கப்பட்டுள்ளது.
நிதித்துறை சிறப்பு செயலாளர் பிரசாந்த் வடநெரே நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.
நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் ராஜகோபால் சுன்கரா நிதித்துறை இணைச் செயலாளராக பதவி ஏற்றார்.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனராக பதவி ஏற்றார்.
அருங்காட்சியக இயக்குனர் கவிதா ராமு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கஜலட்சுமி போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக பதவி ஏற்றார்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையகர இயக்குனர் முரளிதரன் மீன்வளம் மற்றும் மீனவர் நல இயக்குனராக மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் கிரண் குராலா வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக ஆணையராக பணியிடப்பட்டார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சமீரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.
ஈரோடு வணிகவரி (மாநில வரிகள்) இணை ஆணையர் தாக்கரே சுபம் கோவை வணிகவரி இணை ஆணையராக பதவி ஏற்றார்.
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சென்னை வணிகவரி (அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.