தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகி உள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.