Friday, May 16, 2025

10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் : 100-க்கு 100 எடுத்த மாணவர்கள் விவரம்

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகி உள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

100-க்கு 100 எடுத்த மாணவர்கள் விவரம்

பாடம்எண்ணிக்கை
தமிழ்8
ஆங்கிலம்346
கணிதம்1,996
அறிவியல்10,838
சமூக அறிவியல்10,256

முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்

மாவட்டம்தேர்ச்சி சதவீதம்
சிவகங்கை98.3%
விருதுநகர்97.5%
தூத்துக்குடி96.8%
கன்னியாகுமரி96.7%
திருச்சி96.6%
Latest news