Tuesday, April 22, 2025

சென்னை பல்லாவரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 102 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை அருகே பல்லாவரத்தை அடுத்த சங்கர்நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அனகாபுத்தூர்-மதுரவாயல் புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியே வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர்.

அந்த காரில் நான்கு மூட்டைகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த இருவரையும் கைது செய்த போலீசார் 102 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான இருவர் மீதும் கஞ்சா வழக்குப் பதிவு செய்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Latest news