Monday, January 26, 2026

ராஜஸ்தானில் வயலில் பதுக்கி வைத்திருந்த 10 ஆயிரம் கிலோ வெடிமருந்து பறிமுதல்

ராஜஸ்தான் மாநிலம், நாகவூர் மாவட்டம் ஹர்சவூர் கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் வெடிமருந்து பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வயல் பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு பதுக்கி வைத்திருந்த 10 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர், வயலில் வெடிமருந்தை பதுக்கி வைத்திருந்த சுலைமான் கான் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10 ஆயிரம் கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றன.

Related News

Latest News