Friday, December 27, 2024

இதெல்லாம் தெரியாம கிறிஸ்துமஸ் கொண்டாடாதீங்க!

கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டதால் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.

கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்துமஸ் மரம், குடில், சாண்டா கிளாஸ் என நினைவுக்கு வரும் நிலையில் கிறிஸ்துமஸ் தொடர்பான பத்து சுவாரஸ்ய தகவல்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

1965ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி, பிரபல கிறிஸ்துமஸ் பாடலான ‘Jingle Bells’ விண்வெளியில் இசைக்கப்பட்ட  முதல் பாடலாக வரலாறு படைத்தது. கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கத்தை 1800களில் பிரபலப்படுத்தியவர் இங்கிலாந்தை சேர்ந்த இளவரசி சார்லட் (Charlotte) ஆவார்.

தற்போது வலம் வரும் மாடர்ன் சாண்டாவின் உருவத்திற்கு காரணம் coco cola நிறுவனம் என பலரும் கருதி வரும் நிலையில், உண்மையில் இந்த உருவத்தை வடிவமைத்தது தாமஸ் நாஸ்ட் எனும் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆவார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கியமாக பார்க்கப்படும் Candy Cane 1670களில் பாடகர் குழுவினரை அமைதியாக வைத்திருக்க இனிப்புகளாக வழங்கப்பட்டன.

பின்னாளில், இது கிறிஸ்துமஸ் மரத்தில் அலங்கார பொருட்களாக மாறிவிட்டது. 1 சதவீதத்திற்கும் குறைவான கிறிஸ்தவர்கள் இருக்கும் ஜப்பானில் 1974ஆம் ஆண்டு KFC ‘Kentucky for Christmas’ஐ அறிமுகப்படுத்தியதில் இருந்து, தற்போது ஜப்பானில் பலரும் கிறிஸ்துமஸ் அன்று KFCயில் சென்று சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். 

கிறிஸ்துமஸ் அப்போது பாடப்படும் ‘We wish you a merry christmas’ பாடல் ஆரம்பத்தில் பண்டிகை காலங்களில் வேலையாட்கள் எஜமானர்கள் தங்களுக்கு தேவையானது கிடைக்கும் வரை எதிர்ப்பை வலியுறுத்தும் பாடலாக பயன்படுத்தியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து இன்றைக்கும் உலகம் முழுவதும் இருக்கும் குழந்தைகளுக்கு பதில் வரக் காரணம் அமெரிக்காவில் இருந்து செயல்படும் ‘Operation Santa’ என்னும் தன்னார்வ நிறுவனம் ஆகும்.

தவறு செய்யும் குழந்தைகளை கண்டிக்க கிராம்பஸ் என்ற கற்பனை கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. இன்றும் ஆஸ்திரியா பகுதியில் இந்த வேடம் அணிந்து குழந்தைகளை பயமுறுத்துவது வழக்கமாக உள்ளது.

இதுவரை கிறிஸ்துமஸ் கொண்டாட இங்கிலாந்தில் 12 வருடங்களும் அமெரிக்காவில் 260 வருடங்களும் தடை இருந்துள்ளது. இதுவரை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பிய முதல் அதிகாரப்பூர்வ நபர் விக்டோரியா மகாராணி என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news