Friday, February 13, 2026

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்., 10 வீரர்கள் பலி

ஜம்மு–காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் ராணுவ வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சில வீரர்கள் காயமடைந்தனர்.

17 ராணுவ பணியாளர்களை ஏற்றிக்கொண்டு உயரமான ஒரு ராணுவ முகாமை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயமடைந்த ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related News

Latest News