தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது, இந்த நிலையில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட தயாராகி வருகிறார். அரசியலில் காலம் காண உள்ளதால் சினிமாவில் இருந்தும் விலக முடிவெடுத்துள்ளார் விஜய். ஆகையால் ஜனநாயகன் தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய கார் முதல் பிரச்சார பஸ் வரை ஒரே நம்பர் பிளேட்டை பயன்படுத்தி வரும் தகவல் தெரியவந்துள்ளது.
அதாவது, நடிகர் விஜய் பல்வேறு சொகுசுக் கார்கள் வைத்திருக்கிறார். அதில் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரையும் வைத்திருந்தாகவும், அதை விற்றுவிட்டுதாகவும் கடந்த ஓராண்டு இடைவெளியில் மட்டும் மூன்று புதுக் கார்களை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அதில் ஒன்று BMW electric கார், மற்றொன்று Lexus LM கார், மூன்றாவதாக டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு காரான Vellfire. இதுமட்டுமின்றி தற்போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பஸ் ஒன்றும் வாங்கி இரெடுப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி விஜய் சமீபத்தில் வாங்கிய அனைத்து வாகனங்களுக்கும் ஒரே நம்பர் பிளேட்டை வாங்கி பயன்படுத்தி வருகிறாராம்.
அதாவது விஜய் பயன்படுத்தும் வாகனங்களில் 0277 என்கிற நம்பர் தான் இடம்பெற்று இருக்கிறது. இதில் அவரின் BMW electric காரில் TN 14 AH 0277 என்கிற நம்பரும், Lexus LM காரில் TN 14 AL 0277 என்கிற நம்பரும், வேல் ஃபயர் காரில் TN 14 AM 0277 என்கிற நம்பர் பிளேட்டும், மேலும், அவர் புதிதாக வாங்கி உள்ள பிரச்சார பேருந்தில் TN 14 AS 0277 என்கிற நம்பர் பிளேட்டும் இடம்பெற்று உள்ளது. இவை அனைத்திலும் 14-02-77 என்கிற நம்பர் தவறாமல் இடம்பெற்று இருக்கிறது.
சரி, இப்படி விஜய் விரும்பி கேட்டு வாங்கும் அளவுக்கு அந்த நம்பரில் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது.
அந்த ரகசியம் வேறெதுவுமில்லை, விஜய்யின் தங்கச்சி பாசம் தான்.அதாவது, நடிகர் விஜய்யின் தங்கை வித்யா சிறுவயதிலேயே இறந்துவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே, தங்கை மீது விஜய் அதிகளவு பாசம் வைத்திருந்தார். அவரின் நினைவாகவே தான் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஒரே நம்பரை பயன்படுத்தி வருகிறாராம் . 14-02-77 என்பது விஜய்யின் தங்கை வித்யாவின் பிறந்த தினமாம். ஆகவே இதனால்தான் தன்னுடைய வாகனங்களில் இந்த நம்பரை பயன்படுத்தி வருகிறாராம்.
