Thursday, August 28, 2025
HTML tutorial

வெயிலுக்கு Coolஆ கண்ணாடி போடாதீங்க!

கொளுத்தும் வெயிலில் வெளியே போகும் போது கருப்பு கண்ணாடி அணிந்து செல்வது சூரியனின் ultra violet கதிர்வீச்சில் இருந்து கண்களை பாதுகாத்து சற்றே இதமான உணர்வை அளிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், கருப்பு கண்ணாடிகளை தொடர்ந்து அணிவதால் உடல் நலனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

கண்களில் இருக்கும் பினியல் glandஇல் வெளிச்சம் படும்போது வெப்பமான நாளை சமாளிக்க வேண்டிய செய்தி மூளைக்கு சென்று நமது தோல் சூரியனிடம் இருந்து வைட்டமின் Dயை சேமிக்க துவங்கும். கருப்பு கண்ணாடி போட்டிருக்கும் சூழலில் வெயில் குறைவாக இருப்பது போன்ற மாயையை நம் மூளை உணர்கிறது.

இதனால் நம் உடலை இயல்பாக இயங்க வைக்கும் சர்க்காடியன் ரிதம்(Circadian Rhythm)இல் குழப்பம் ஏற்பட்டு உடல்சோர்வு தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறும் மருத்துவர்கள் இடைவிடாமல் கருப்பு கண்ணாடி அணிவதை தவிர்த்து வெயிலிடம் இருந்து பாதுகாக்க அவ்வப்போது அணிவதில் சிக்கல் ஏதும் இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News