தூக்கமின்மைக்கும் முடி கொட்டுவதற்கும் இருக்கும் சம்மந்தம் தெரிந்துகொள்ளுங்கள்

481
Advertisement

மனிதனின் ஆரோக்கியத்திற்குத் துக்கம் மிகவும் முக்கிய, அதிலும் ஒரு மனிதன் சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும், அப்படி தூங்காவிட்டால் பல விதமான பிரச்சனைகள் வருகிறது, உடல் இயற்கையாகப் பழுது மற்றும் ஒழுங்குமுறை செயல்முறைக்கு அமைதியான தூக்கம் தேவை இது மன அழுத்தத்திலிருந்து மீள உதவுகிறது.

எனவே முறையான தூக்கமில்லை என்றால் கட்டாயமாக முடி கொட்டும் பிரச்சனை வருகிறது, துக்கம் இல்லை என்றால் மன அழுத்தம் உண்டாகும், இது சம்மந்தமாக அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பேத்தாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று மன அழுத்த நிலைகளுக்கும் முடி வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. அதிகப்படியான அழுத்த நிலைக்குத் தொடர்புடைய நியூரோஹார்மோன்கள், நரம்பியக்கடத்திகள் மற்றும் சைட்டோகைன்களின் வெளியீடு முடி வளர்ச்சி சுழற்சியைப் பாதிப்பதாகச் சொல்லப்படுகிறது.

தூக்கமின்மையால் முடியின் மயிர்க்கால்கள் வலுவிழக்கச் செய்து முடி கொட்டுவதை உண்டாக்கும். கூடுதலாக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை இரண்டும் இணையும் போது ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா அல்லது முடி உதிர்வை ஏற்படுத்தும்.


முறையான துக்கம் இல்லை என்றால் முடி கொட்டும் பிரச்சனை மட்டுமில்லாமல் பல உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும் வருகிறது கண்டிப்பாக அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகம் இல்லாமல் இருக்கவேண்டும் மனதை நிதானப்படுத்துங்கள் அமைதியாக சுவாச பயிற்சி மற்றும் யோகா செய்யலாம், தினசரி நன்றாகத் தூங்குவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.