2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 வருடமே இருக்கும் நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான் என்பதால் அனைவரின் கண்களும் பட்ஜெட் அறிவிப்புகள் மீதே உள்ளன. அடுத்த வருட பட்ஜெட் பாதி பட்ஜெட்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் திமுக வெளியிட்ட 6 அறிவிப்புகள் மக்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்துள்ளது. முக்கியமாக தேர்தலை மனதில் வைத்து இந்த 6 அறிவிப்புகள் வெளியாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முதலாவதாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தை பொறுத்து கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பணிபுரியும் பெண்களின் வசதியை கருத்தில் கொண்டு மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிப்பும் மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்களுக்கு மீண்டும் உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் அதிரடியான அறிவிப்புகளாக உள்ளன.
மூன்றாவதாக பெண்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்தால் பதிவுக் கட்டணம் 1% குறைக்கப்படும். ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகளின் பத்திரப் பதிவுகளுக்கும் இது பொருந்தும் என்ற இந்த அறிவிப்பு முக்கியமானதாக இருக்கிறது.
நான்காவதாக சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும். இதில் ஐடி பார்க்குகள், பன்னடடுக்கு கட்டிடங்கள், புதிய ஐடி நிறுவனங்கள், மெட்ரோ, உலக தர வசதி, புதிய நிறுவனங்கள், வெளிநாட்டில் இருப்பது போன்ற வசதிகளுடன் குளோபல் சிட்டி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு.
ஐந்தாவதாக சரண்டர் பணபலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணியாளர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பில் வருடந்தோறும் 15 நாட்களை ஒப்படைப்பு செய்து பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ள இந்த அறிவிப்பு.
ஆறாவதாக சென்னை பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற அறிவிப்பும் விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற இந்த அட்டகாசமான அறிவிப்புகளுமே.
மக்களை கவரும் இந்த ஆறு அட்டகாசமான அறிவிப்புகளும் வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.