பள்ளிகளில் பலவகை வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கொண்ட ஒரு நாடு தான் ஜப்பான்.
ஏற்கனவே பெண்கள் வெள்ளை நிற உள்ளாடை மட்டுமே அணிய வேண்டும் என மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதித்து அது தற்போது நடைமுறையிலும் உள்ள இந்த நிலையில் பெண்கள் போனிடெய்ல் சிகையலங்காரம் [PONYTAIL HAIRSTLYE] வைப்பதற்கும் ஜப்பானிய பள்ளிகள் தடை விதித்துள்ளது.
பெண்களின் கழுத்து பகுதி ஆண்களுக்கு பாலுணர்ச்சியை தூண்டும் எனவும் அதனால் அதை பார்ப்பதிலிருந்து அவர்களை தடுக்க இந்த கட்டுப்பாடு அவசியம் எனவும் விளக்கம் அளித்துள்ளது அந்நாட்டு பள்ளிகள்.
இது போன்ற பிற்போக்கு தனமான பெண் குழந்தைகள் மீதான வன்முறை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக சில ஜப்பானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.