Tuesday, January 21, 2025

இனி கொஞ்சம் நெய்யை மூக்கில் விட்டுக்கோங்க!

குணப்படுத்துவதை விட தடுப்பதே மேல் என்ற கூற்றுக்கு ஏற்ப ஆயுர்வேதாவில் பல முறைகள் உள்ளது. சில துளி நெய்யை மூக்கில் விடுவதும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதன் மூலம் புதிய தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பை அளிக்கும் வழிகளில் ஒன்று தான்.

ஆயுர்வேதாவின் பஞ்சகர்மா சிகிச்சை முறைகளில் ஒன்றான நாஸ்யா எனப்படும் முறையை பின்பற்றும்போது ஒவ்வாமை, இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகளை தடுக்க முடியும். காலையிலோ இரவிலோ சில துளி நெய்யை மூக்கில் விடுவது தூக்கமின்மையை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் தலைவலி, மன அழுத்தம், இளநரை ஆகிய பிரச்சினைகளை தீர்க்க முடியும் என கூறும் ஆயுர்வேத மருத்துவர்கள் இந்த சிகிச்சை முறை ஞாபகத்திறனையும் மனநலனையும் மேம்படுத்த உதவும் என விளக்குகின்றனர்.

வெதுவெதுப்பான நெய்யை பஞ்சில் முக்கி அல்லது விரலின் நுனியில் எடுத்து ஒரு சில துளிகளை மட்டும் மெதுவாக உள்ளிழுப்பது தான் சரியான ஆயுர்வேத முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news