இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் சுற்றலாதளங்களுக்கு பஞ்சமில்லை. வாழ்வில் ஒருமுறையாவது அங்குள்ள அழகை ரசிக வேண்டும். இதற்காகவே அங்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதம் மாநில அரசு பல்வேரு ஏற்பாடுகளை செய்துவருகிறது.
அந்த வகையில் அங்குள்ள ஒரு கடற்கரையில், கடலுக்கு மேலே அலையோடு அலையாக நடந்து சென்று பார்க்க வசதியாக 100 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பேப்பூர் கடற்கரையில், அம்மாநில சுற்றுலாத் துறையால் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் டூரிஸம் மற்றும் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமையில் நடுக்கடலில் புதிய அனுபவத்தை தரக்கூடிய வகையில் இந்த பாலம் 100 மீட்டர் நீளமும் , 3 மீட்டர் அகலத்துடன் தண்ணீரில் மிதக்கும் உயர் அடர்த்தி பாலிஎதிலின் தொகுப்பைகொண்டு அமைக்கப்படுள்ளது.
இதில் , 7 கிலோ எடையுள்ள 1300 ஹச்டிபிஇ பிளாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாழ்வான தொகுதிகளில் 2 மீட்டர் இடைவெளியில் தூண்கள் போன்ற அமைப்பு வழங்கப்பட்டுள்ளன. கீழே விழாமல் இருக்க உதவுவதற்காக பாலத்தின் பக்கவாட்டில் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
மேலும் இந்த பாலம் 100 கிலோ எடையுள்ள 31 நங்கூரங்களுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 500 பேர் வரை பயணிக்க முடியும். முதல் கட்டமாக , லைப் ஜாக்கெட் அணிந்த 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.கடலை நோக்கி நீண்டிருக்கும் பாலத்தின் முடிவில், பார்வையாளர்கள் கடலின் அழகை ரசிக்கலாம். இதற்காக 15 மீட்டர் அகலத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் பாலத்தில் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படும். இதற்கான நுழைவுக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. மாநில சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதம் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது அம்மாநிலஅரசு