Monday, March 31, 2025

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆங்கில ஆசிரியர் கைது

வாணியம்பாடி அருகே, அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலூர், மலை ரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஊத்தங்கரை பகுதியைச்சேர்ந்த பிரபு என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கம்ப்யூட்டர் தேர்வின்போது ஏழாம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மேத்யூ, பாதிக்கப்பட்ட 6 மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். மாணவிகள் எழுத்துப்பூர்வமாக கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர் நேற்று மாலை வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வாணியம்பாடி நகர காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அன்பரசி தலைமையிலான போலீசார் பிரபுவை கைது விசாரணை நடத்தி வருகிறார்.

Latest news