நம்மில் பல பேருக்கு எழுந்தவுடன் காபி அல்லது டீ இரண்டில் ஏதேனும் ஒன்று இல்லையென்றால் அந்த நாளே நன்றாக போகாது . இதிலும் பலருக்கு நாளில் ஒரு முறையாவது டீ , காபி குடிக்கவில்லை என்றால் தலையே வெடித்துவிடும். நம் நாட்டில் காலையில் எழுந்தவுடன் டீ , காபி குடிக்க வேண்டுமென்பது ஒரு எழுதப்படாத விதியாகிவிட்டது .
தேநீர் மற்றும் காபி இரண்டிலும் டானின் என்ற வேதிப்பொருள் அதிகளவில் உள்ளதால் , அவை பற்களை வெண்மை நிறத்திலிருந்து மஞ்சள் படிந்த நிறத்திற்கு மாற்றுகிறது .
தேநீர் மற்றும் காபி இரண்டும் இயற்கையாகவே அதிக அமிலத்தன்மை கொண்டவை என்பதால், காலையில் வெறும் வயிற்றில் டீ , காபியை உட்கொள்வதனால் உடலில் நீரிழப்பு அதிகமாகி அல்சர் போன்ற எதிர்பார்க்க முடியாத பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
காலையில் எழுந்தவுடன் முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் டீ , காபியால் நம் உடலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை குறைப்பதற்கு வழிவகை செய்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள் .