மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ்க்கு தேர்வான “தமிழக இளைஞர்”

73
Advertisement

தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள 4வது மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ்  போட்டியில் இந்தியாவின் சார்பாக  பங்கேற்க தமிழகத்தைச் சார்ந்த சரத் மனோகரன்  தேர்வு ஆகி உள்ளார்.

பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், பிரேசில்,ஜெர்மனி, மலேசியா, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்கும் 4வது மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ்  போட்டி தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் மே 29-2022 முதல் ஜூன் 6-2022 வரை நடைபெற உள்ளது.

Advertisement

இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த சரத் மனோகரன் தேர்வாகியுள்ளார்.

இவர் ஏற்கனவே 2020-21க்கான ரூபாரு மிஸ்டர் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்டர் நேஷனல் யுனிவெர்ஸ் போன்ற உலகளாவிய போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் பங்கேற்பதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன மேலும் இப்போட்டியில் வெற்றிபெற பலரும்  தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

போட்டியில்  ஃபிட்னஸ் ரவுண்ட், டேலண்ட் ரவுண்ட், ஸ்டைலிங், மனோபாவம் மற்றும் நடத்தை, டிசைனர் வாக் ரவுண்ட் என  பலசுற்றுகளை கொண்ட போட்டியாக இது நடைபெற உள்ளது.தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இதுபோன்ற போட்டியில் பங்கேற்பது,பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக  அமைந்துள்ளது.