கர்நாடக மாநிலம் மங்களூருவில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை

204

கர்நாடக மாநிலம் மங்களூருவில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதன் பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். சூரத்கல் பகுதியில் நண்பருடன் நின்று கொண்டிருந்த ஃபாசில் என்ற இளைஞரை, காரில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்து சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த கொலை குறித்து சூரத்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால், மங்களூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.