வீட்டில் ஏற்றுக்கொள்ளவிலை” இணையவாசிகளின் இதங்களை கவர்ந்துவரும் காதல் கதை

108
Advertisement

காதல் எதையும் எதிர்பார்த்து வருவதில்லை.காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. பல பரிமாணங்களில் உலாவி வருவது. உண்மை காதலை உணர்ந்தவருக்கு அது உயிரானது. மெய்யான காதலில் மூழ்கியவர்களுக்கு அது உரிமையானது.

இது போன்று காதலை பற்றி சொல்லிகொண்டே போகலாம்.இணையத்தில் கூலித்தொழிலாளின் காதல் கதை இணையாவசிகன் மனதை குளிரச்செய்துள்ளது.வாங்க நாம்பளும் அந்த அழகான ஜோடிகளை வாழ்த்துவோம் என இணையத்தில் இது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Advertisement

பகிரப்பட்டுள்ள  புகைப்படத்தில் இரண்டு பேர் அமர்ந்திருப்பதை காணலாம். புகைப்படத்தில் அமர்ந்திருப்பவரின் பெயர் அப்சல், அவரது மனைவி பெயர் சபீனா.இருவரும் அவர்களின் காதல் கதையை விவரிக்கின்றனர்.

நாங்கள் ஒருவரையொருவர் விரும்புகிறோம் என் வயது 19,அவருக்கு 21.நங்கள் ஒரே தட்டில் தான் உணவு சாப்பிடுவோம். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒருவரையொருவர் தெரியும்.நாட்கள் கடந்துசெல்ல அது காதலாக மாறியது.ஆனால் எங்கள் பெற்றோர்கள் எங்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்ல.

ஒரு வருடங்களுக்கு முன் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.இப்பொழுது பெற்றோர்களின் வீடிற்கு அருகில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறோம் என்றார் சபீனா.

அவரின் கணவரை பற்றி கேட்டபோது,.”அப்சலின் சிகை அலங்காரம் தனக்கு மிகவும் பிடிக்கும்… அவன் பேசும் விதம் தனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார் சபீனா.அதே நேரத்தில், சபீனாவைப் பற்றி அப்சல் கூறுகையில் “நான் எங்கு தொடங்க வேண்டும்? அவளுடைய  இயல்பு மிகவும் பிடிக்கும் .அவள் எப்போதும் துப்பட்டா அணிவது எனக்கும் பிடிக்கும்” என்கிறார்.

தினமும் மாலை, அஃப்சல் வேலை முடிந்து வீடு திரும்பியபின், ​​சபீனாவுக்கு சமைப்பதில் உதவுவாராம்.ஆனால் அப்சல்  நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு வீட்டில் சமையல் செய்வதற்கும் உதவுவது கஷ்டமாக இருக்கும் என வருத்தத்துடன் சொல்கிறார் சபீனா.

சில  சமயங்களில் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்படும். ஆனால் பின்னர் சமாதானம் ஆகிவிடுவோம்.திருமணத்திற்குப் பிறகு தான் அதிக பொறுப்புள்ளவராகவும், கடின உழைப்பாளியாகவும் மாறியதாக அப்சல் கூறுகிறார்.

இவர்களின் திருமணத்தில்  நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் கலந்துகொண்டனர் மேலும்  விருந்தினர்களுக்கு ரஸ்குல்லா மற்றும் பெப்சி வழங்கப்பட்டது என மனதில் மகிழ்ச்சியோடு அவர்களின் காதல் கதையை நிறைவு செய்தனர்.

இந்த அழகான இளம்தம்பதியின் கதையை கேட்டு உருகிய இணையவாசிகள் அழகான கருத்துகள் மற்றும் அவர்களின் வாழ்த்துக்களை தெருவித்துவருகின்றனர்.