ஏழை தந்தை வாங்கிட்டு வந்த பழைய சைக்கிள்-மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த சிறுவன்

158
Advertisement

மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை.அப்படி அனைத்தும் இருந்தும் பலருக்கு மகிழ்ச்சி இல்லை என கூறுவதை பாத்துருபோம்.ஆனால் குழந்தைகளின் உலகமே வேறு,அங்கு அவர்கள் எந்த போட்டி பொறாமை இல்லாமல்,தனெக்கென கிடைப்பதை வைத்து மகிழ்ச்சி அடைவதே குழந்தைகள்.

இந்நிலையில் இணையத்தில்  ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தை  ஈர்த்து உள்ளது.அதில் தந்தை ஒருவர் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய சைக்கிள் ஒன்றை வாங்கிவந்துள்ளார்.சைக்கிள்யை கண்டதும் மகிழ்ச்சியில் கால்கள் நிலத்தில் கூட படாமல் துள்ளிக்குதித்து தன் தந்தை சைக்கிள் வாங்கிவந்துள்ளார் என மகிழ்சசியை வெளிப்படுத்திகிறான் சிறுவன் ஒருவன்.

Advertisement

அந்த சைக்கிளுக்கு பூ வைத்து சாமி கும்பிடும் தந்தை,நீயும் சாமி கும்பிட்டுக்கொள் என மகனிடம் சொல்ல,அந்த சிறுவன் இருக்கைகளை கூப்பி சாமி கும்மிடும் அழகு ரசிக்கும்படி உள்ளது.சிறுவனின் இந்த செயல் இனையத்தில் பலரை ரசிக்கவைத்துஉள்ளது,இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.