முற்போக்கு எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி உடல் நலக்குறைவால் காலமானார்

375

அவருக்கு வயது 88.

இவர், கம்யூனிஸ சித்தாந்தங்களை உள்ளடக்கி, தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா என ஏழு நாவல்களை எழுதி உள்ளார்.

சின்னப்ப பாரதியின் நாவல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் இருந்து பொற்கிழி விருது உள்பட, தமிழ் அமைப்புகளால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

நாமக்கல்லில் தனது மனைவி செல்லம்மாளுடன் வசித்து வந்த அவர், கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில், எழுத்தாளர் சின்னப்ப பாரதி இயற்கை எய்தினார். அவரது உடல் நாமக்கல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.