உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21.25 கோடியை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை 21 கோடியே 25 லட்சத்து 83 ஆயிரத்து 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 44 லட்சத்து 44 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 19 கோடியே 1 லட்சத்து 96 ஆயிரத்து 786 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 1 கோடியே 79 லட்சத்து 42 ஆயிரத்து 187 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.