உலக முன்னணி வீரர்களை மிரட்டும் “குப்பைமேட்டு சிறுவன்”

251
Advertisement

மனிதனின் மதிப்பை உயர்த்துவது அவனின் “திறமை” மட்டுமே.ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமான திறமைகள் இருக்கும்.அதனை வெளிக்கொண்டு வருவதும், வராத்ததும் அவர் அவர் முயற்சிலே உள்ளது.

அதேவேளையில் திறமையை வெளிப்படும் அனைவருமே வெளி உலகிற்கு தெரிவதில்லை. அதுபோன்றவர்களின் திறமை,சமூக வலைத்தளங்களில் வியக்கவைத்து  வருவதும் உண்டு.தற்போது இணையத்தில் பகிரப்பட்ட சிறுவனின் வீடியோ இணையவாசிகளை பிரமிக்க வைத்துள்ளது.

ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்த இந்த வீடியோவில்,

பார்ப்பதற்கு குடிசை பகுதி போல் இருக்கும் இடத்தில் ஒரு புறம் குப்பை மேடாக உளள்து.அங்கு சில சிறுவர்கள் நின்றுக்கொன்று இருக்கின்றனர்.அதில் ஓடி வரும் சிறுவன் ஒருவன் தடகளம் விளையாட்டு போட்டிகளில் வருவது போல தொடர்ந்து பலமுறை வானில் பறந்தபடி பலட்டி அடித்து,அங்கு இருக்கும் கரடுமுரடான குப்பை உள்ள இடத்தில்  கச்சிதமாக தரையிறங்குகிறார்.

சிறுவன் திறமையை கண்டு வியந்து பார்க்கும் இணையவாசிகள் தங்கள் பாராட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.