ஆப்கன் பெண்களின் நிலை என்ன.?

204
afghanistan-women
Advertisement

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, அங்குள்ள பெண்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

ஏனெனில் தாலிபான்களின் முந்தைய ஆட்சியில் பெண்கள் பள்ளிக்கு செல்வதை எதிர்த்தனர்.

ஆப்கானிஸ்தானில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்க தடை விதித்து, தாலிபான்கள், முதல் கட்டளையை பிறப்பித்தனர்.

Advertisement

இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் உறைவிட பள்ளியின் நிறுவனர் ஷபானா ரசிக், தாலிபான்களிடமிருந்து அவர்களை பாதுகாக்க மாணவிகளின் பதிவுகளை எரித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் உறைவிடப் பள்ளியின் நிறுவனர் என்ற முறையில், தனது மாணவிகளின் பதிவுகளை அழிப்பதற்காக அல்லாமல், அவர்களையும், அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பதற்காக இந்த செயலை செய்ததாக பதிவிட்டுள்ளார்.