நாடுவிட்டு நாடு கடந்து சிறைக்கைதியை காதலித்து கரம்பிடிக்கும் தங்க  பெண்

46
Advertisement

இங்கிலாந்தை சேர்ந்த லாரா என்ற பெண் ஒருவர் தற்போது அமெரிக்காவில் சிறையில் இருக்கும் குற்றவாளியை திருமணம் செய்ய உள்ளார்.

32 வயதான லாரா , நான்கு குழந்தைகளுக்கு தாய்.இதற்கிடையில் அங்கீகரிக்கப்படாமல் மற்றும்  குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை இணைக்கும் ஒரு செயலி மூலம் ஒரு நபரை சந்தித்துள்ளார்.நாட்கள் செல்லச்செல்ல நெருக்கமான இவர்கள் காதலில் விழுந்தனர்.

அவர் அனுப்பும் கடிதங்கள் மற்றும் கவிதைகளை படிக்க விரும்புவதாக கூறும் லாரா அவரை திருமணம் செய்ய  முடிவெடுத்துள்ளார்.தற்போது இந்த திருமணத்தில் என்ன சிக்கல் என்றால், இவர்கள் திருமணம் சிறையில் தான்  நடைபெறும் மேலும் திருமணத்தை நடத்திவைக்கும் ஒரு  நபர் மற்றும் திருமணத்திற்கு வருகையாக ஒரு  நபருக்கு மட்டுமே அனுமதி.

Advertisement

லாராவின் தாய் மற்றும் சகோதிரின் அனுமதியோயோடு அடுத்த ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.19 வயது இளைஞனின் மரணத்தில், 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இவரின் காதலன் 2032 ல் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்.

காதலன் குறித்து 4 குழந்தைகளுக்கு தாயான லாரா கூறுகையில், அவரின் கடந்த காலத்தைப் பற்றிய ‘நேர்மை மற்றும் வெளிப்படையான தன்மை’ தன்னைக் கவர்ந்ததாகவும் மற்றும் அவர் சிறையில் வாழ்க்கையை  கழித்த பிறகு அவர் மிகவும் வித்தியாசமான மனிதராக மாறிவிட்டார் என்று கூறியுள்ளார்.