பிச்சைக்கேட்ட சிறுவனின் கன்னத்தை கிள்ளி விளையாடிய இளம்பெண் 

50
Advertisement

மனிதன் இயந்திரமாய் ஓடிக்கொண்டுருக்கும் நேரத்தில்  இது போன்று வீடியோக்கள் மனதை சற்று மகிழ்ச்சியாய்  வைத்திருக்க உதவுகிறது.வங்கதேசத்தில் போக்குவரத்து சிக்னலில் மோட்டார் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவரிடம் அச்சாலையில் வீடற்ற சிறுவன் ஒருவன் உதவி கேட்கிறான்.

சாப்பிடுவது ஏதாவது உதவுங்கள் என கேட்கும் அந்த சிறுவனை கண்டு உருகும் அந்த பெண், சாலையில் பிச்சை எடுக்கும் சிறுவனின் மனவலியை குறைக்க அவனிடம் அன்பை வெளிப்படுத்திக்கிறார்.எந்த ஏற்ற தாழ்வும் பார்க்காமல் அந்த சிறுவன் கன்னத்தை கிள்ளி விளையாடுகிறார் அந்த பெண்.பின், சிறுவனக்கு தலைமுடியை சரிசெய்து, இறுதியில் கொஞ்சம் பணத்தையும் தருகிறார். ஒரு அம்மா குழந்தையிடம் கொஞ்சி விளையாடுவது போல அந்தக் சிறுவனிடம் விளையாடி கடந்துசென்றார் அந்த முகத்தெரியாத பெண்.

சாலையில்,போறபோக்கில் யாராவது ஏதாவது தருவார்களா ? என எதிர்பார்த்து  நாள்தோறும் வெளியில் நின்று ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளும் சிறுவன்  ,அந்த பெண்ணின்  தாய் பாசத்தில் உருகிவிடுகிறான்.இந்த வீடியோவை தற்போது இணையவாசிகள் இதங்களையும் உருகவைத்துள்ளது.

Advertisement

இது போன்று எத்தனையோ ஆதரவற்ற குழந்தைகள் தாய் அன்பிற்காக ஏங்கிருக்க,எத்தனை முகம்தெரியாத பெண் உள்ளனர் இவரை போன்று ?