ஆன்லைனில் நாற்காலிக்கு பதில் வந்த பொருள்-அதிர்ச்சியடைந்த பெண்

35
Advertisement

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில்  பெண் ஒருவர் லெதர் நாற்காலி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.சில தினங்களுக்கு பின் அவர் ஆர்டர் செய்ததாக பார்சல் ஒன்று வந்துள்ளது.

ஆர்வத்துடன்  பார்சலை திறந்து பார்த்த அந்த பெண்  அதிர்ச்சி அடைந்தார்.அவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக இரத்தக் குப்பி ஒன்று அந்த அட்டைப்பெட்டியில் உள்ளது.அதுவும் அந்த குப்பி முழுக்க இரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் பதறிபோனார் அந்த பெண்.

இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த பெண், இந்த பார்சலை கண்டு வாயடைத்து போனேன்.அந்த அட்டை பேட்டியை மூடி ஓரமாக வைத்துவிட்டு அங்கிருந்து வேறு இடத்திற்கு தான் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

Advertisement