செயலியில் “ஹெலிகாப்டர்” சேவை இருப்பதாக காட்டிய கால் டாக்ஸி நிறுவனம் !

311
Advertisement

சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சின்னது முதல் பெரிய பிரச்சனை வரை நிகழ்ந்துவிடும்.அது சீரியசானதாகவும் இருக்கக்கூடும் அல்லது வேடிக்கையாகவும் இருக்கக்கூடும். இங்கு அப்படி தான் ஒரு பெண்ணிக்கு வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Woman gets Uber helicopter ride as cheapest option to reach JFK airport people ask where will they pick you up from

அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தில் பெண் ஒருவர் உபேர் டாக்ஸி முன்பதிவு செய்ய முயன்ற போது தான் இந்த சம்பவம்  நடந்துள்ளது. அந்த பெண் தன் வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு செல்வதற்கு உபேர் டாக்ஸி செயலியில் முன் பதிவு செய்ய , சேரவிருக்கும் இடத்தை நிரப்பி உள்ளார்.

Advertisement

அப்போது, அந்த செயலில் காட்டிய விபரங்கள் அவரை ஒரு நிமிடம் குழப்பத்தில் ஆழ்த்தியது.அதில், அவர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல, குறைந்த விலையில் ஹெலிகாப்டர் உள்ளதாக காட்டி உள்ளது.

அதனுடன், காரில் உள்ள மற்ற சேவைகளையும் காட்டியுள்ளது.அந்த செயலில் காட்டும் இந்த விவரங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளத்தில்  பகிர்ந்துள்ளார்.இதை பார்க்கும் இணையவாசிகள் வேடிக்கையாக தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.