பொதுஇடத்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த வாலிபர்களை காலணியை கழற்றி வெளுத்துவிட்ட பெண்

34
Advertisement

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் என்ற இடத்தில், பெண் ஒருவர் சந்தைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.இந்நிலையில் அந்த பெண்ணை பின்தொடர்ந்து  வந்த இரு வாலிபர்கள் அந்த பெண்ணிடிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து அந்த பெண்,இருவரையும் கண்டித்துள்ளார்.ஆனால் அந்த வாலிபர்கள் பின்வாங்கததால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த பெண் தன்  காலில் அணிந்திருந்த காலணியால்  இருவரையும் இழுத்துபோட்டு அடித்துள்ளார்.

Advertisement

“தவறு செய்துவிட்டோம் மணித்துவிடுங்கள்” என கதறும் இரு வாலிபர்களையும் மாறி மாறி வெளுத்து வாங்கிவிட்டார் அந்த பெண்.இது குறித்து காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை எனவும்,தகவல் மட்டும் கிடைத்தது.புகார் கொடுக்கப்பட்டால் நடவடிக்கைள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஇடத்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த இரு வாலிபர்களை காலணியை கழற்றி கன்னம் கன்னமாக அறிந்த வீடியோ இணையத்தில் வேகமாய் பரவிவருகிறது.அந்த பெண்ணின் தைரியத்தை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.