5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் 4 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஏலம் நடைபெற உள்ளது.

37

5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் 4 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஏலம் நடைபெற உள்ளது. முதல் நாள் ஏலத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கியது. 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிகத் திறன் கொண்ட 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ, ஏா்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ஏலத்தின் முதல் நாளான நேற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெற்றது. இந்நிலையில், 5ஜி ஏலத்தின் 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இன்றுடன் ஏல நடவடிக்கைகள் நிறைவடையும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் ஏலத்தை முடித்து வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.