7 நாட்களில் தொப்பை காணாம போகனுமா? காலையில் இந்த ஜூஸ் போட்டு குடிங்க!

111
Advertisement

உடல் எடை குறைப்பில் சமச்சீரான ஊட்டச்சத்துகளை சரியான நேர இடைவெளியில் உட்கொள்வது, முறையான உடற்பயிற்சி, நிம்மதியான தூக்கம் என பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு பயிற்சிகளின் போது எடுத்துக் கொள்ள பூசணி ஜூஸ் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.

ஒரு சிறிய பூசணி, 3 கேரட், 1 ஆப்பிள், ஒரு சிறிய துண்டு இஞ்சியுடன் அரை ஸ்பூன் லவங்கப்பட்டை பொடி, ஐஸ் கட்டிகள் மற்றும் தேவையான அளவு நாட்டு சக்கரை சேர்த்து மிக்சியில் அரைத்தால் ஊட்டச்சத்து மிக்க பானம் ரெடி. சுவையாக இருக்கும் இந்த ஜூஸில் உள்ள பீட்டா கரோடின்ஸ் கண் பார்வையை கூர்மையாக்குவதோடு சருமப் பொலிவையும் ஊக்குவிக்கிறது.

கொலஸ்ட்ராலை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த ஜூஸில் A, B மற்றும் E விட்டமின்கள், சிங்க், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைந்துள்ளன.

செரிமானக் கோளாறுகளை சரி செய்து உள்ளிருந்து நச்சுக் கழிவுகளை அகற்றும் இந்த ஜூஸ், உடல் எடை குறைப்புக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பதால், சரியான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வதோடு இது போன்ற சத்து மிகுந்த பானங்களை உட்கொள்வது பலனளிக்கும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.