தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படுமா? என்பது குறித்து, இன்று அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்…!

125
Advertisement

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன்,

காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அமைச்சர், தனியார் பள்ளிகளில், தமிழ் கட்டாய பாடமாக பின்பற்றப்படுகிறதா? தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது,

பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது குறித்தும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படுமா? அல்லது விடுமுறை நீடிக்கப்படுமா? என்பது குறித்து, இன்று அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.