வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் கைது

42

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், கல்லூரி மாணவியிடம் வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக பேசிய  கல்லூரி முதல்வரும், பாஜக பிரமுகருமான தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டையில் தனியார் ஹோமியோபதி மற்றும் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

அந்த கல்லூரியின் தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ், அதே கல்லூரியில் பயிலும் ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பான வீடியோ, கல்லூரி மாணவிகள் மத்தியில் பரவியது. இதையடுத்து ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.