மாநகராட்சி மேயர் அதிகாரம் என்ன

2299
Advertisement

மேயர் என்பவர், அந்த நகரின் முதல் குடிமகன். அவர் தான், அந்த நகரின் ஒட்டுமொத்த குரலாக அவர் இருப்பார், என்கிறது உள்ளாட்சி கட்டமைப்பு. இதோ மேயரின் அதிகாரங்கள் மற்றும் அவருக்கான சலுகைகள்:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் கூட்டத்தை நடத்தும் பொறுப்பு மேயருக்கு உண்டு

கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானங்களை மேயர் முன்வைப்பார்.

Advertisement

பிறர் கொண்டு வரும் தீர்மானங்களை ஏற்பதும், தவிர்ப்பதும் மேயரின் விருப்பம்.

மேயருக்காக பிரத்யேக அங்கி மற்றும் செங்கோல் வழங்கப்படும். கூட்டத்தில் அதனுடன் தான் மேயர் பங்கேற்பார்.

ரூ.1 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் உண்டு

ஆனால், அந்த அதிகாரத்தை கவுன்சிலர்கள் கூட்டத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.

அவசரம் என்றால், கவுன்சிலர்கள் ஒப்புதல் பெறாமல் முன்ஒப்புதல் கொடுத்து திட்டங்களை செயல்படுத்த முடியும். பின்னர் ஒப்புதல் பெறலாம்.

மேயருக்கு தனியாக ஊதியம் என்று எதுவும் இல்லை.

மேயருக்கு மாநகராட்சி சார்பில் அவர் பதவிக்காலம் வரை வசிக்க பங்களா வசதி செய்து தரப்படும்

மேயருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கார் வழங்கப்படும். அதற்கான எரிபொருளும் தரப்படும்

ஆட்சியர், கோட்டாட்சியர் போல மேயருக்கும் ‛டவாலி’ ஒருவர் உடன் இருப்பார்

மேயருக்கு மாநகராட்சி அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்படும்.

மாநகராட்சி திட்டங்களுக்கு மேயரின் ஒப்புதல் மிக முக்கியம்

அதே நேரத்தில் ஆணையரின் அதிகாரங்களும், மேயருக்கு இணையாக இருக்கும்.