தேயிலை தோட்டத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமை

300

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது நண்பருடன் திருவனந்தபுரம் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த 4 பேர், சிறுமியின் நண்பரை கடுமையாக தாக்கி விட்டு, அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சிறுமியின் நண்பர் கூச்சலிட்டதைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்ற 4 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் அருகிலுள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்பது  விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.