மணமகள் கழுத்தில் மலைப்பாம்பை போட்ட மணமகன்

392
Advertisement

பாம்பு என்ற பெயரை கேட்டாலே ஒரு நிமிடம் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு பதற்றம் அடைந்துவிடுவோம்.மிருகக்காட்சி சாலைகளில் கூண்டில் இருக்கும் பாம்பை பார்த்தாலே அது  உடல்மேல் ஊர்ந்து போவது  போல உள்ளது என்பார்கள் சிலர்.

ஆனால் சற்றும் பயமின்றி பாம்புடன் சாகசம் செய்யும் மனிதர்களும் உண்டு.இந்த வரிசையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதில், மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது.

ஊர் மக்கள் கூடிநிற்க மணமக்களுக்கு திருமண சடங்குகள் நடைபெற்று வருகிறது.ஒருகட்டத்தில் மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் மாலையைமாற்றிக்கொள்ள வேண்டும்.நேரமும் வந்தது,அவர்களும் மாத்தினார்கள் ,ஆனால் நீங்கள் நினைப்பது போல அது “மாலை” அல்ல “மலைப்பாம்பு”.

ஆம் ,வெள்ளைநிற உடையில் இருக்கும் மணமக்கள் இருவரும் பாம்புகளை தங்கள் கழுத்தில்  மாற்றிக்கொண்டனர்.தகவலின் படி,மணமக்கள் இருவரும் உள்ளூர் வனவிலங்கு துறை ஊழியர்கள்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதை கண்டு திகைத்த இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.