திருமணத்தில் தன் நண்பனின் உயிரை பறித்த  மணமகன்

192
Advertisement

திருமணத்தில் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாது.இந்த கொண்டாட்டங்கள் அந்தந்த மாநில கலாச்சாரத்திற்க்கு ஏற்றாற்போல் இருக்கும்.

வடமாநிலங்களை பொறுத்தவரை சில பகுதிகளில்  திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானைநோக்கி சுடுவது , வாள் வைத்து சாகசம்செய்வது போன்ற ஆபத்தான முறையில் கொண்டாடுவார்கள்

இங்கும் அப்படித்தான், உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் திருமணத்தன்று மனகோலத்தில் மணமகன் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் ஊர்வலம்  செல்ல தயாராக இருந்தபோது,தான் இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மேலப்பார்த்து சுட்டுள்ளார்.

ஆனால் , துப்பாக்கி தோட்டா அருகே நின்றுகொண்டு இருந்த அவரின் நண்பனின் உடலில் பாய்ந்தது.தகவலின்படி உயிரிழந்த அவரின் நண்பர் ஒரு இந்திய இராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து மற்றொருவர்  எடுத்த வீடியோவில் பதிவாகிஉள்ளது.

இந்த வீடியோ   இணையத்தில் வைரலாகிய வரும் நிலையில் ,இந்த விபத்து குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.