தீம் பார்க்கில் பயங்கர விபத்து- 30 அடி கீழே வீசப்பட்ட மக்கள் !

304
Advertisement

தீம் பார்க் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வேலை பளுவை மறந்து சற்று நிம்மதியாக குடும்பத்துடன் நேரத்தை கழிக்க விரும்பும் இடங்களில் ஒன்று.

இது போன்ற பொழுதுபோக்கு இடங்களை பொறுத்தவரை முழுக்க முழுக்க குழந்தைகளை ஈர்ப்பதற்காகவே விதவிதமான விளையாட்டுகளை வைத்திருப்பார்கள்.

இதில் என்னை விளையாட்டுகள் இருக்கிறது என்பது முக்கியம் இல்லை.குழந்தைகள் ஆகட்டும் பெரியவர்கள் ஆகட்டும் அந்த  விளையாட்டில் பாதுகாப்பு உள்ளதா ? என்பது தான் முக்கியம். சில நேரங்களில் இது போன்று கேளிக்கை பூங்காக்களில் விபத்துகள் நிகழ்ந்துள்ளது.





இந்நிலையில் , இந்தோனேசியாவின் கெஞ்சரன் பூங்காவில் பயங்கர விபத்து நடந்துள்ளது.தகவலின்படி இந்த  கேளிக்கை பூங்காவில் நீர் சரிவு விளையாடும் பொது சுழல் மூடிய குழாய் சரிவின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது , இதில் நீரில் சரிக்கி கீழ் நோக்கி  வந்தவர்கள் 30 அடியில் இருந்து கான்கிரீட் தரையில் வீசப்பட்டனர்.

இதில் 16 பேரில், எட்டு பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் அவர்களில் மூன்று பேர் எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மனதை பதைபதைக்கவைக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த விபத்தை நேரில் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் திகைத்துநின்றனர்.

முதல்கட்ட விசாரணையில்,உடைந்து விழுந்த நீர் சரிவு பலஆண்டுகால பழமையானது என தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து பூங்கா நிர்வாகத்துடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மே 7 ஆம் தேதி நடந்த இந்த  கொடூர விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.