ஆற்றை கடந்த வாகனம்- வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பதற வைக்கும் காட்சி

113
Advertisement

தெலுங்கானா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் பல பகுதிகள் நீரில் முழ்கின,பல கிராமங்கள் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் சிக்கியுள்ள மக்களை  மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தும் விதம் வாரங்கல் காவல்துறை எச்சரிக்கை வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.அதில்,பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் ஆற்று பாலத்தை  ஜீப் மூலம் ஒருவர் கடக்கிறார்.

ஆனால்,காற்றாற்று  வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஓடுவதால் , பாதி தூரத்தை கடந்த அந்த ஜீப் நீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் கவிழ்ந்தது.அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் மனம் பதறவைக்கும் வகையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை பகிர்ந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது அம்மாநில காவல்துறை.

Advertisement