கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை,  காங்கிரஸ் தலைவர்கள் சித்தாராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் வாக்களித்தனர்….

109
Advertisement

கர்நாடக  சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அவர் போட்டியிடும் ஷிகாவி தொகுதியில் வாக்களித்தார்.

இதேபோல், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரும் தங்களது தொகுதிகளில் வாக்களித்தனர். ஷிகாரிபுரா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வாக்களித்தார். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவும் அதே வாக்குச்சாவடியில்  வாக்களித்தார். வாக்காளர்கள் காலை முதலே  நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மத சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் வாக்களித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பெங்களூரு ஜெயாநகரில் வாக்கை பதிவு செய்தார்.வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.