“இந்த நிலையில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆகலாம்” –  அதிபர் ஜெலென்ஸ்கி

241

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நீட்டித்துள்ள நிலையில், போரால் தனது அழகை இழந்த கார்கீவ் மாகாணத்தை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார்.

கார்கீவ்வின் சில பகுதிகள் சொல்ல முடியாத அளவிற்கு மோசமாக மாறி உள்ளது எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இந்த நிலையில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆகலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் கார்கீவ் மாகாணத்தை ரஷ்யர்களிடமிருந்து இருந்து மீட்ட உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.